NILGIRIS

வெளியாட்களைக் கண்டாலே மறைந்து கொள்ளும் சிறுவர்கள்... பணியர் பழங்குடி மக்கள் பற்றி தெரியுமா...

பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை பணியர் பழங்குடி மக்கள் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பழங்குடி இனமாகும். இவர்கள் தமிழ்நாட்டில் கூடலூர் வட்டாரத்திலும் கேரளாவில் பாலக்காடு, கண்ணனூர், வயநாடு ஆகிய பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்திலும் ஒரு சிலர் மட்டுமே கூடலூர் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இவர்கள் பேசும் மொழி பணிய மொழியாகும். இது மலையாளத்தின் ஒரு கிளை மொழியாகக் கருதப்படுகிறது. கருத்த நிறமும் சுருண்ட முடியும் தடித்த உதடும் கொண்ட இம்மக்கள் நீக்ராயிட் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடும் உழைப்பாளிகளான இம்மக்களில் பெரும்பாலானோர் உழவு வேலை செய்கின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் குடிசையைச் சாலை எனவும் பல குடிசைகள் கொண்ட ஊரினை பாடி எனவும் அழைக்கின்றனர். பாடியின் தலைவனை கூட்டன் என்றழைக்கின்றனர். இதையும் படிங்க: நோய் நாடி நோய் முதல் நாடி… நோயாளிகள் மருந்து சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை… இம்மக்கள் ஒரு காலத்தில் மரம் வெட்டியும், யானை பிடித்தும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அனைத்து மிளகு, காப்பி தோட்டங்களுக்கும் மரங்களில் ஏறி காய்கள் பறித்தல் போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர். நீலகிரியில் பணியர் மக்கள் வாழும் பகுதியில் இதுநாள் வரையிலும் மின்சாரம் இன்றி மெழுகுவர்த்தி ஒளியிலேயே வாழ்ந்து வந்துள்ளனர். தற்பொழுது தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் முயற்சியுடன் மின்சாரம் பெற்றுள்ளனர். இவர்களது குழந்தைகள் பள்ளிக் கல்வியை நாடாதவர்களாகவே உள்ளனர். யாரேனும் இவர்கள் பகுதிக்கு வந்தால் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்று விடுவார்கள் என பயந்து வீட்டின் மேற்கூரையிலும், புதர்க்குள்ளும் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். இதையும் படிங்க: தேயிலை தோட்டம் வழியா குதிரைல ரைடு போனா ஜாலி தான்… நீலகிரியில் ஆர்வம் காட்டும் டூரிஸ்ட்… இவர்களது மூதாதையர்கள் காதுகளில் அணிந்து இருந்த அணிகலன் காரணமாக இவர்களின் காதுகள் கீழே இறங்கியபடி உள்ளது. கடுமையான சூழலில் வாழ்ந்தாலும் இம்மக்கள் இன்றுவரையிலும் அவர்களது வாழ்வாதாரத்திற்காகக் கடுமையான உழைப்பை போட்டு உழைத்து வருகின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.