NILGIRIS

"I Love OOTY" அழகுடன் ஒரு அவார்னஸ்... டூரிஸ்ட்டுகளை கவரும் செல்ஃபி பாய்ண்ட்...

செல்பி பாயிண்ட் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை புரிகின்றனர். அவர்கள் நீலகிரியில் பிளாஸ்டிக்கிற்கு தடை இருப்பது குறித்து அறியாமல் ஒருமுறை பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைக் கைகளில் கொண்டு வந்து விடுகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊட்டியில் சேரிங்கிராஸ் பகுதியில் 2500 பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு I Love Ooty என்ற செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்ட் அருகே நின்ற சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இது சேரிங்கிராஸ் பகுதி ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாக்கப்பட்ட ஒளிரும் வண்ண விளக்குகளால் அழகிய நீர் நிலையுடன் காட்சியளிக்கிறது. உதகையின் முக்கியமான பகுதியாக இந்த இடம் இருப்பதால் இங்கு பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு இந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: அடடே… இந்த ஐடியா நல்லா இருக்கே… எஸ்டேட்டில் தேயிலையைக் கையாள புது ட்ரிக்… ஊட்டி நகராட்சியுடன் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு இந்த வகையான வடிவமைப்புகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் குளுகுளு காலநிலையில் ஊட்டியின் அழகை ரசித்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த செல்ஃபி பாயிண்ட் மேலும் உற்சாகத்தை அளிப்பதாக உணர்கின்றனர். இதுகுறித்து சென்னை ஆர்க் கிங்டம் அமைப்பைச் சேர்ந்த கௌதம் கூறுகையில், “சோதனைச் சாவடிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற 2500 பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு ஐந்து நாட்களாக இந்த வடிவமைப்பை உருவாக்கி உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் பத்து இடங்களில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்து வருகிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டினை முடிந்த அளவில் குறைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை நாம் அனைவரும் உணர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுப்போம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.