NILGIRIS

12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பூ... படுகர் மக்கள் கலாச்சாரத்துடன் உள்ள தொடர்பு தெரியுமா..?

படுகர் வாழ்வியல் சூழலில் குறிஞ்சி நீலகிரி மாவட்டத்தில் உள்ள எப்பநாடு பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என சங்ககாலம் முதலே அழைக்கப்பட்டது. இந்த மலையில் வாழும் படுகர் சமுதாய மக்களின் வாழ்க்கை முறையும் குறிஞ்சியோடு ஒன்றிணைந்துள்ளதென தெரிவிக்கின்றனர். படுகர் சமுதாய மக்கள் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்களது வாழ்வோடு குறிஞ்சி ஒன்றிணைந்துள்ளது என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ் பேராசிரியர் சுனில் ஜோகி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் விளக்குவது படுகர்கள் குறிஞ்சியை கட்டெ ஊ என்று அழைக்கின்றனர். அவர்களின் வாழ்வியலில் குறிஞ்சி என்பது குறி என்பதன் அடிப்படையாக வந்தது. படுகர் சடங்கியலில் வயக்காரராகவும் காலநிலையைச் சுட்டும் முதுமொழியாகவும் விளங்குவது நோக்கத்தக்கது. சடங்கியல் “கரு அரசோது” சடங்கு, காலவியல் - கட்டெய ஊ ஊத்தலெ பெட்டக பர பந்தரா பொதுவியல் - ஹெப்பு ஜேனு, கட்டெ பெட்டு ஆகியவை உள்ளதென விளக்குகிறார். இதையும் படிங்க: கிரவுட் இல்லாமல் கண்டுகளிக்கலாம்… சிம்ஸ் பூங்காவில் சில் பண்ணும் சுற்றுலாப் பயணிகள்… மேலும் மானுடவியலாளர் மகாலிங்கம் கூறுகையில், “உலகத்தில் 200 வகை குறிஞ்சியில் ஆசிய கண்டத்தில் நூறு வகை உள்ளது. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் 30 வகையான குறிஞ்சிகள் உள்ளது. குறிஞ்சி மலரை படுகர்கள் கட்டே ஊ எனவும், கட்டெ சொப்பு எனவும் அழைக்கின்றனர். படுகர்கள் தொட்ட கட்டெ இன்னும் குறிஞ்சி செடியை விரைவாகப் பயன்படுத்தியுள்ளனர். பனிப்பொழியும் காலங்களில் இந்த செடிகள் வாடாமல் இருப்பதால் மாட்டிற்கு தீவனமாகவும் பயன்படுத்தியுள்ளனர். படுகர்கள் வாழ்வில் குறிஞ்சி ஒன்றிணைந்து ஒன்றாக உள்ளது” எனத் தெரிவித்தார். சமீப நாட்களில் அடர்ந்த வனப் பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதாலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடமாக உள்ளதாலும் எப்பநாடு பகுதியில் குறிஞ்சி மலரைக் காண்பதற்காகச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது வனத்துறை. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.