NILGIRIS

"அட்டைப் பூச்சிகளுக்கு மத்தியில் நடந்து சென்று படித்தோம்" தோடர் மக்களின் சவாலான வாழ்க்கை...

வாகனம் இல்லாத சாலை நீலகிரி மாவட்டம் எப்பநாடு கெங்கமுடி கிராமப் பகுதியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பிக்கப்பதி மந்து. பிக்கப்பதி மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இது நாள் வரையிலும் பேருந்திற்கும் மின்சாரத்திற்கும் சாலை வசதி கேட்டும் அடிப்படை உரிமைகளுக்காகவே பாதி வாழ்நாளைச் செலவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். கொரனூர் என்னும் இடம் வரை தற்பொழுது அரசுப் பேருந்து செல்கிறது. அங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து செல்லும் அவல நிலை இன்றும் தொடர்கிறது. இதையும் படிங்க: சொத்துப் பிரச்சினை சட்டுன்னு முடிஞ்சுடும்… முனியப்பனிடம் மக்கள் வைக்கும் விநோத வேண்டுதல்… இவர்கள் கிராமத்திற்குச் செல்லும் சாலை மண்சாலையாகச் சில இடங்களில் கருங்கற்களால் சமைக்கப்பட்ட குண்டும் குழியுமாக உள்ள ஒரு மண் சாலையையே காண முடிகிறது. அதிலும் இவர்கள் நடந்து செல்லும் வனப் பகுதியில் யானை, கரடி, காட்டு எருமை, சிறுத்தை மற்றும் பல வனவிலங்குகளும் இந்த பகுதியில் அடிக்கடி வந்து செல்வதால் இவர்கள் பயந்தே வாழ வேண்டி உள்ளது. இவர்கள் பாரம்பரியமாக விவசாயம் மற்றும் எருமை மாடுகளை வைத்து அதன் மூலமாக பால் மற்றும் பாலினால் ஆன உற்பத்தி பொருட்களைச் செய்து விற்பனை செய்கின்றனர். ஆனால் இவர்கள் இருக்கும் பகுதியிலிருந்து பிற கிராமங்களுக்குச் செல்வதற்கே வெகு தூரம் நடக்க வேண்டி உள்ளதால் வாழ்வாதாரமே இல்லாமல் போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் முன்னர் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் தற்பொழுது 15 குடும்பங்களுக்கும் குறைவாகவே இந்த வசித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர். குழந்தைகளின் கல்விக்காகப் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர் பகுதி மக்கள் . இதையும் படிங்க: செந்தூர் முருகனின் சிலையைச் செதுக்கிய இடமா… ஆற்று வெள்ளம் சூழும் கோவிலின் ஆச்சரியத் தகவல்… இவர்களுக்கு விவசாயம் செய்து வந்த நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் தற்சமயம் விவசாயம் செய்வதையே விட்டு விட்டோம் எனக் கவலை தெரிவிக்கின்றனர். இவர்கள் வாழும் இந்த பகுதியில் பாரம்பரியமான கோவில் ஒரு சில வீடுகள் அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்து கல்வி கற்பதற்காகப் பல மயில் தூரம் நடந்து சென்று கல்வி பயின்றவர்கள் உள்ளனர். பிக்கப்பதி மந்து பகுதியிலிருந்து சுப்ரியா என்னும் தொடர் பழங்குடியின பெண் கூறுகையில், “முதுகலைப் பட்டம் பெற்று தற்பொழுது ஒரு வங்கியில் பணியாற்றுகின்றேன். அடிப்படையான சாலை மற்றும் இதர வசதிகள் வேண்டும். அவ்வாறாக இருந்தால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகளின் வாழ்வாதாரம் மேலும் உயரம்” எனத் தெரிவித்தார். சுப்ரியா என்பவர் கூறுகையில், “அடிப்படை வசதிகள் இல்லாததால் 50 குடும்பங்கள் இருந்த இந்த இடத்தில் தற்பொழுது 15 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர். இங்கிருந்து பள்ளி செல்வதற்காக நான்கு கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. நடக்கும் பாதையில் மழைக் காலங்களில் அட்டைப்பூச்சிகள் கடிக்கின்றது. அதனையும் தாண்டி நாங்கள் கல்வி பயின்றோம். தற்பொழுதுதான் இருசக்கர வாகனங்கள் உள்ளது. அதனால் சற்று சிரமம் குறைந்துள்ளது. இதையும் படிங்க: ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட நீர்வீழ்ச்சியா… எல்க் ஃபால்ஸ் அருவிக்கு படையெடுக்கும் பயணிகள்… கல்வி பயிலும் காலங்களில் இங்கு வந்து செல்வதற்கு வசதிகள் இல்லாததால் உறவினர்கள் மற்றும் வெளிப்பகுதியிலேயே இருந்து படித்தேன். தற்பொழுது ஒரு வங்கியில் பணி செய்கிறேன். ஏதேனும் சுப, துக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றால் உறவினர்கள் வருவார்கள். அவர்களைத் தங்க வைப்பதற்குக் கூட இடமில்லை. ஒரு சமுதாயக்கூடம் வேண்டி மனுக்களை அளித்துள்ளோம் விரைவாக நடக்கும் என நம்புகிறோம். சரியான சாலை இல்லாததால் வீடு கட்டுவதற்குக் கூட கட்டுமான பொருட்களைக் கொண்டு வர வாகனங்கள் வருவதில்லை. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு குடும்பங்கள் வசிக்கின்றோம். வெளிப்பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றால் கூட வனப்பகுதிக்குள் நடந்து வர வேண்டியது உள்ளதால் வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ளது. முன்பெல்லாம் விவசாயம் செய்து வந்தோம் வனவிலங்குகளின் அச்சுறுத்தலால் எதுவுமே செய்ய முடிவதில்லை. பால் கறந்து மற்ற கிராமங்களுக்குக் கொண்டு சென்று திரும்புவதற்கு ஒரு நாள் ஆகிறது. அதனால் வெளிப்பகுதிகளில் தற்பொழுது பால் விநியோகம் செய்வதில்லை கரண்ட் பில் கட்டுவதற்கே 30 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. அந்த நாட்களில் முழுவதுமாக கூலி இல்லாமல் போய்விடுகிறது” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.