NILGIRIS

ஒரு கிலோ கேரட் விதை ரூ.50 ஆயிரம்... இந்த இயந்திரத்தால் இனி விதை சிக்கனமாகும்...

கேரட் விதைக்க இயந்திர முறை நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் அதிக அளவில் விவசாயம் செய்யும் ஒரு முக்கிய மாவட்டமாக விளங்குகிறது. இங்கு கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு மற்றும் ஆங்கிலக் காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விவசாயிகள் பயிர் செய்யும் முறையில் வேளாண்மைத் துறை பல முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரியில் இதுநாள் வரையிலும் கேரட் விதையை விதைப்பதற்கு ஆட்களைக் கொண்டு கைகளால் விதைக்கப்பட்டு வந்தது. இதனால் அதிக அளவில் ஆட்கள் கூலியும், வேலைப்பாடுகளும் அதிகரிக்கிறது. இதனை இயந்திர மயமாக்கும் பொருட்டு கேரட் நடவு செய்வதில் இயந்திர முறையை வேளாண்மைத் துறை கொண்டு வந்துள்ளது. இதுவரை கேரட் பேடுகள் அமைத்து அதில் கோடுகள் அமைத்து அதன் பிறகு விதை விதைக்கப்படுகிறது. அதன் பின்னர் சரியான முறையில் அளவறிந்து விதைக்கப்படுகிறது. அதன் பிறகு மண்ணைக் கொண்டு விதைகள் மூடப்படுகிறது. இதனால் இரண்டு வேலை ஆட்கள் தேவைப்படுகின்றனர். இதையும் படிங்க: அடடே… இந்த ஐடியா நல்லா இருக்கே… எஸ்டேட்டில் தேயிலையைக் கையாள புது ட்ரிக்… ஆனால் தற்பொழுது இந்த இயந்திரத்தின் மூலம் தேவைப்படும் அளவிற்கு அதுவாகவே விதைகளை இட்டு தானாகவே மண்ணை மூடிக்கொள்ளும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் மோட்டார் தேவை இன்றி தானாகவே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய அளவிலான ஒரு இயந்திரமும், பெரிய அளவில் ஒரு இயந்திரமும் ஒத்திகைக்காகக் காண்பிக்கப்பட்டது. சிறிய வகை இயந்திரத்தில் கேரட் விதைகள் மட்டுமே விதைக்க முடியும். ஆனால் பெரிய அளவிலான இயந்திரத்தில் கேரட் மற்றும் பீட்ரூட் விதைகள் விதைக்க முடியும். இதனால் விவசாயிகளுக்கு விதை விதைக்கும் முறை எளிமையானதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கல்லக்கொரை ஆடா பகுதியில் வேளாண் துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு உரம் பயன்பாடு மருந்துகளின் பயன்பாடு விதைகளின் தன்மையைக் கண்டறிதல் மண்வளத்தை ஆராய்தல் மற்றும் விலை பொருட்கள், விற்பனை உழவு செய்யும் முறை என அனைத்தையும் விவசாயிகளுக்கு எடுத்து உரைத்தனர். இதையும் படிங்க: போருக்குச் செல்லும் முன் செய்யும் பூஜை… காளி பூஜை செய்த முத்தாரம்மன் கோவில் பக்தர்கள்… இந்த முகாம் குறித்து விவசாயி சிவசங்கரன் கூறுகையில் வேளாண்மைத் துறையின் மூலமாக விவசாயிகள் பயனடையும் விதமாகப் பல்வேறு வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. கேரட் விதை விதைக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளால் பணம், நேரம், உடலுழைப்பு ஆகிய அனைத்தும் சேமிக்கப்படும். இயந்திரமயம் ஆக்கப்பட்டவரும் சூழ்நிலையில் விவசாயிகளும் அதற்கேற்றாற் போல உயர் தொழில்நுட்பத்தின் உதவியோடு முன்னேறிச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.