NILGIRIS

பச்சை பசேலென நீலகிரி தேயிலைத் தோட்டங்கள்... மலையில் வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்கள்...

தேயிலை தொழிலாளர்கள் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் தேயிலை உற்பத்தியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்குகிறது. மலையரசியின் மடியில் பச்சை போர்வை போர்த்தியதைப் போலக் கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலைத் தோட்டங்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளது. இங்குள்ள மிகப்பெரிய அளவிலான தேயிலை எஸ்டேட்டுகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானதாகவும் உள்ளது. சுமார் 1000 ஏக்கர் 2000 ஏக்கர் என தன்வசம் வைத்துள்ள மிக முக்கிய நிறுவனங்கள் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு சில தேயிலை எஸ்டேட்டுகள் சிறந்த முறையில் பணியாளர்கள் ஊதியம், மருத்துவ வசதி, குழந்தைகளுக்குக் கல்வி வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இங்குள்ள தேயிலை எஸ்டேட்டுகள் ISO தரச் சான்று பெற்று பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் தேயிலைத் தூள்கள் மூலமாக சிறந்த லாபத்தினை ஈட்டி வருகிறது. இதையும் படிங்க: 40ஆயிரம் பேருக்கு பிரியாணி… கோவையில் நடந்த பிரம்மாண்ட மிலாடி நபி விருந்து… ஆனால் அங்கு பணிபுரியும் மக்களுக்கு உள்ள பழைய வீடுகளை புனரமைத்துத் தருமாறும், அடிப்படை கழிவறை வசதி, வீட்டுக்கு வீடு குடிநீர் வசதி, மருத்துவ வசதி மற்றும் அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ற ஊதியத்தை வழங்க வேண்டுமென ஏக்கம் தெரிவிக்கின்றனர் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள். அத்தியாவசியப் பிரச்சனைகளுக்காகப் பல்வேறு முறை அரசு அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என தெரிவிக்கின்றார் தொழிற்சங்கத் தலைவர் உதகை சிவா. எங்களது தொழில் சங்கத்தின் மூலமாக இவர்களது அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்திலேயே மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்திருந்தோம். சம்பந்தப்பட்ட துறையினர் நேரில் சென்று இவர்களது குடியிருப்புப் பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம் என தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில் ஆயிரக்கணக்கான தேயிலைத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம், போனஸ் மற்றும் பொருட்கள் ஏற்றுமதியானால் அங்கிருந்து கிடைக்கக்கூடிய தொழிலாளர் உரிமைத் தொகையை எஸ்டேட் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர் தொழிற்சங்கத்தினர். இதையும் படிங்க: புரட்டாசி மாத பௌர்ணமி… திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்… தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்தது குறித்து நீலகிரி தோட்டத் தொழிலாளர் மக்கள் முன்னேற்ற நல சங்கத்தின் தலைவர் உதகை சிவா கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை நிறுவனங்களில் நான்கு தலைமுறைகளுக்கு முன்னர் திருச்சி அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து தேயிலை தொழிலாளர்களாக இங்கு வந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகளிலேயே இன்றளவும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கல்வி, குடிநீர், சாலை, மருத்துவம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை. ISO முத்திரை பெற்ற பல்வேறு நாடுகளுக்கும் வணிகம் செய்யும் இந்த தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்விலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு உதவி புரிய வேண்டும்" எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.