NILGIRIS

கோலிவுட் முதல் பாலிவுட் வரை... திரையுலகை வசீகரித்த நீலகிரி சூட்டிங் ஸ்பாட்...

ஷூட்டிங் மேடு பகுதியில் இருந்து அழகிய காட்சிகள் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான நீலகிரி மாவட்டம் பல சுற்றுலாத் தலங்கள் மட்டுமல்லாமல் பல சூட்டிங் ஸ்பாட்களையும் கொண்டுள்ளது. ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 7th மைல் என அழைக்கக் கூடிய படப்பிடிப்பு பகுதி ஒரு சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது. இயற்கையான அழகு சூழ்ந்த இந்தப் பகுதி தோடர் சமுதாய மக்கள் வாழும் மந்து என அழைக்கக்கூடிய கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. இயற்கையான புல்வெளிகள், பைகாரா அணையின் அற்புதக் காட்சி மற்றும் மனிதர்களின் முக அமைப்பினைப் போல அமைந்துள்ள மூர்த்தி மலை முகடுகள் மேலும் பசுமையான வனக்காடுகள் இயற்கை சூழ்ந்து அமைதியான ஒரு இடமாக காட்சியளிக்கிறது இந்த சூட்டிங் ஸ்பாட் பகுதி. இந்த இடத்தில் ஏராளமான படப்பிடிப்புகள் நடந்துள்ளது என தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்கள் இங்கு படம்பிடிக்கபட்டுள்ளது என கூறப்படுகிறது. இதையும் படிங்க: பாலக்காடு - தூத்துக்குடிக்கு பாயும் பாலருவி எக்ஸ்பிரஸ்… மக்களின் பல நாள் கனவு நிறைவேறியது… இந்த மலைகளுக்குப் பின்புறமாகத் தோடர் பழங்குடியின மக்களின் மந்து மற்றும் விவசாய நிலங்களும் அமைந்துள்ளது. இதன் முன் பகுதியிலேயே அழகான தோடர் சமுதாய மக்களின் இயற்கையான வீடுகளைப் போன்ற அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ள இந்த இடம் தற்பொழுது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. இது குறித்து சூட்டிங் ஸ்பாட் பகுதியில் பணிபுரியும் சூர்யா என்பவர் கூறுகையில், “நான் இந்த பணியில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது. முன்பெல்லாம் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவர். கூடலூர் செல்லும் வழியில் கேரளாவைச் சேர்ந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவர். வயநாடு சம்பவத்திற்குப் பின்பு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த இடத்தில் பல மொழிகளில் திரைப்படங்களும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரது படப்பிடிப்புகளும் இங்கு நடைபெற்றுள்ளது. அதனால் இந்த இடம் பிரபலமாக உள்ளது. இதையும் படிங்க: லட்சங்களில் சம்பாதிப்பதை விட பாரம்பரியம் தான் முக்கியம்… அரசு வேலையை உதறி பூசாரியான நபர்… இந்த இடத்தை ஷூட்டிங் மேடு எனவும் அழைப்பர். இந்த மலை மீது நின்று பார்க்கும் பொழுது முக்குருத்தி மலை முகடுகள், பைக்காரா அணையின் மற்றொரு நீர்நிலைகள் ஆகியவை கண்களுக்குத் தென்படும். சூட்டிங் ஸ்பாட் என்பதாலும், இங்குள்ள இயற்கை அழகு காரணமாகவும் ஏராளமான மக்கள் இங்கு கண்டுகளிக்க வருவதுண்டு” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.