NILGIRIS

பாரா பவர் லிப்டிங்கில் தேசிய அளவில் சாதனை... இவர் வெற்றியின் ரகசியம் தெரியுமா...

போட்டிகளில் பங்கேற்ற பொழுது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள குண்டாடா பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர்களது கிராமத்திற்கு அடிப்படை சாலை வசதி கூட கிடையாது. பள்ளி செல்லும் குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் இன்றளவும் ஒத்தையடி பாதையிலேயே நடந்து செல்கின்றனர். சரவணன் சிறு வயது முதலே தந்தை மற்றும் தம்பியின் உதவியுடன் பள்ளி மற்றும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு கல்லூரிப் படிப்பிற்காகச் சமவெளிப் பகுதிகளுக்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்து அரசு விடுதியில் வார்டனாக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு 2018ஆம் ஆண்டு இவர் பளு தூக்கும் போட்டிகளில் ஆர்வம் கொண்டு முயற்சிக்க ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு சாதனைகளையும் தொடர்ந்து புரிந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய அளவிலான பல போட்டிகளில் இவர் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக உள்ளது. இவர்கள் கிராமத்திற்குச் சாலை வசதி அமைத்துத் தருவதையே முழுக் கவனத்தில் கொண்டு இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதாகத் தெரிவிக்கின்றார். இதையும் படிங்க: நேந்திரன் வாழையில் மகசூல் பெருக இது தான் வழி… விவசாயி சொல்லும் சக்சஸ் ஃபார்முலா… மேலும், எந்தவித ஊட்டச்சத்துப் பொருட்களுமின்றி இயற்கையான முறையிலேயே பயிற்சிகளை மேற்கொண்டு பல்வேறு வெற்றிகளையும் கண்டு வருகிறார். இவரைத் தொடர்ந்து பல்வேறு மாணவர்களையும் இந்தத் துறையில் உருவாக்கியும் வருகிறார். மேலும், ஊடகங்கள் மற்றும் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே கடந்த ஆண்டு டிசம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா பாரா கேம்ஸில் பாரா பவர் லிப்டிங் போட்டியில் தமிழ்நாடு சார்பாகக் கலந்துகொண்ட சரவணன், 65 கிலோ எடை பிரிவில் 150 கிலோ எடையைத் தூக்கி தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் வீடுகளில் பல்வேறு பதக்கங்கள் கோப்பைகள் சான்றிதழ்கள் என அனைத்தையும் வாங்கி குவித்துள்ளார். ஆனால் எங்கள் கிராமத்திற்குச் சாலை வசதி இல்லாததே மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும் வருத்தம் தெரிவிக்கின்றார். இவர்களது கிராமத்திற்குச் செல்லும் பாதை ஒற்றையடி மண் பாதையாகவும், வனவிலங்குகள் அதிகம் உள்ள இடமாகவும் உள்ளதால் சில சமயங்களில் பயத்திலேயே நடக்க வேண்டி உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர். இதையும் படிங்க: டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க… சரவணனிடம் பயிற்சி பெற்றுவரும் மாணவர் கூறுகையில், “தேசிய அளவிலான போட்டிகளுக்குக் கலந்து கொள்ளச் செல்லும் பொழுது காலை உணவிற்கு மட்டுமே எங்களிடம் பணம் இருக்கும். பிற மாநிலத்திலிருந்து வருபவர்கள் நம்மை கண்டு கொள்ளக்கூட மாட்டார்கள். ஆனால் அந்தப் போட்டியில் முதல் பரிசு வென்றதும் நம்மிடம் வந்து நமது பயிற்சி குறித்து உரையாடுவார்கள் அதனால் வெற்றி பெறுவதையே முழு முயற்சியாகக் கொண்டுள்ளோம். முயன்று ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவோம்” எனவும் தெரிவிக்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.