NILGIRIS

அப்துல் கலாமின் பிறந்தநாள்... அறிவியல் தினமாகக் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்...

அப்துல் கலாமின் பிறந்தநாள்... அறிவியல் தினமாகக் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்... அணு விஞ்ஞானியும் ஏவுகணை நாயகன் என்று போற்றப்படும், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாள் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் அணுசக்தி வளர்ச்சி என்பதை வலியுறுத்தியதோடு அதைச் சாத்தியமாக்கத் தனது வாழ்நாள் முழுவதும் தேசத்தின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தவர் அப்துல் கலாம். அவர் பள்ளி பயிலும் மாணவ மாணவிகள் இடத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ளார். அப்துல் கலாமின் பிறந்த தினமான இன்று, நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்து அகலார் பகுதியில் அமைந்துள்ள குருகுலம் பள்ளியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. இதையும் படிங்க: சிலுசிலுவென தொடர் மழை… சுடச்சுட மீன் சாப்பிட்டா எப்படி இருக்கும்… இதில் மாணவ மாணவிகள் பலரும் தங்களின் தனித்திறமைகளாகப் பல்வேறு கைவினைப் பொருட்களைக் கொண்டு பல வடிவங்களை உருவாக்கியுள்ளனர். இதில் மனிதனின் இதயம் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வடிவமைப்பும், இந்திய வரைபடத்தில் இயற்கை தானியங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள வடிவமைப்பு, உலக அதிசயங்களான தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர், பெட்ரா, மனித உடல் உறுப்புகள், சர்க்யூட்டுகள் மற்றும் பல வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து அதனை வெளிக்கொண்டுவரும் விதமாக இந்த நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது என தெரிவிக்கின்றனர் இந்த பள்ளி ஆசிரியர்கள். இது குறித்து ஆசிரியை சத்யா கூறுகையில், “இன்றைய தினம் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை மாணவர்கள் தினமாகக் கொண்டாடப்படுவதை ஒட்டி, அறிவியல் மாதிரிகள் மற்றும் கைவினைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கி பொருட்களை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். எங்கள் மாணவர்களின் உலக அதிசயங்கள் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது. தொடர் இணைவு பக்க இணைவு சர்க்யூட்டுகள் சிறப்பானதாக இருந்தது. மேலும் சூரிய குடும்பம் மற்றும் கோள்கள் பற்றி சிறப்பான விளக்கம் அளித்தனர். பாக்டீரியாவால் உண்டாகும் நோய்கள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கினார்கள்” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: உலகளவில் பெண்களை அச்சுறுத்தும் நோய்… இந்த அறிகுறி இருந்தா அலட்சியப்படுத்தாதீங்க… வருங்கால இளைஞர்களுக்கு அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாக எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளையும், அறிவியலாளர்களையும் உருவாக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.