NILGIRIS

பலாபழத்திற்காக வீட்டிற்கு வரும் யானைகள்... வனத்திற்குள் வாழும் மக்களின் சவாலான வாழ்க்கை...

இருளர் பழங்குடி மக்கள் நீலகிரி மாவட்டம் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளம் மட்டும் இன்றி பல்வேறு பழங்குடி மக்கள் வாழும் ஒரு முக்கியமான இடமாக விளங்குகிறது. அதிலும் அடர்ந்த வனப்பகுதிகளில் வாழக்கூடிய பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை வித்தியாசமான ஒன்றாக உள்ளது. இவர்களுடைய வீடுகளில் பெரும்பாலும் முன் பகுதிகளில் கதவுகள் வைப்பதில்லை. சமீப காலத்திலேயே கதவுகளை வைக்கத் துவங்கியுள்ளனர். இருளர் பழங்குடி மக்கள் யானை, கரடி, சிறுத்தை, காட்டு மாடு ஆகியவை வாழக்கூடிய அடர்ந்த வனப் பகுதிகளில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களுடைய வீடுகளை தாங்களே கட்டிக் கொள்கின்றனர். வனங்களில் உள்ளதால் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வெகு தூரம் நடந்து வெளிப்பகுதிக்கு வர வேண்டி உள்ளது. அடர்ந்த வனப் பகுதிகளில் வாழ்வதால் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பல்வேறு பழ வகைகள், காய்கறிகள் கீரை வகைகள் ஆகியவற்றை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி ரேஸ்… கன்னியாகுமரி அருகே களைகட்டிய போட்டி… அடர்ந்த வனப் பகுதிக்குள் வெகு தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் இவர்கள் வாழ்விடத்திற்கு எந்த அரசு அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிடுவதில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் புதூர் இருளர் பழங்குடி மக்கள். இவர்களது குழந்தைகள் பள்ளிக் கல்விக்காகப் பல்வேறு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இருளர் பழங்குடி மக்கள் ஒரு சிலர் இவர்கள் கிராமத்திற்கு மிகவும் தொலைவில் உள்ளதால் நகரப் பகுதிகளிலேயே வீடுகளை வாடகைக்கு வாங்கி குடியிருக்கின்றனர். அவசர மருத்துவத் தேவைக்காக வனப்பகுதியிலிருந்து சற்று ஆட்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய நகரப் பகுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். வயது முதிர்ந்தோர் யாரேனும் இருந்தால் மருத்துவத் தேவைக்காகத் தொட்டில் கட்டி தூக்கி வருகின்றனர். பின்தங்கியுள்ள இவர்களது வாழ்விற்குப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் கை கொடுத்து உதவுகிறது. பலாப்பழம் சீசன் என்பதால் குடியிருப்புப் பகுதிகளில் நோக்கி அதிகளவு யானைகள் வந்து செல்கின்றன. சமீபத்தில் ஒரு பழங்குடியின பெண்மணியைத் தாக்கியதால் இவரது கிராமத்திற்குச் செல்வதற்கு அச்சம் அடைய வேண்டி உள்ளது. இதையும் படிங்க: இந்த மாதிரி டீ எங்கும் கிடைக்காதா… ஏற்காடு செல்லும் டூரிஸ்டுகளை சொக்க வைக்கும் டீ… இவர்களது வாழ்க்கை முறை குறித்து பழங்குடியின பெண் ஒருவர் கூறுகையில், “சாலை வசதி, மின்சாரம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசித்து வருகிறோம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வெகு தூரம் சொல்ல வேண்டி உள்ளது. மருத்துவமனை மற்றும் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. வீடுகளைச் சுற்றி காப்பி, மிளகு செடிகள் மற்றும் புதர்கள் அதிகமாக முளைத்துள்ளது. இதனால் வன விலங்குகளின் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். அரசு எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.