RAMANATHAPURAM

பத்து வருடங்களில் அழியும் கடல்வளம்... கடல் வளத்தினை கெடுக்கும் ப்ளாஸ்டிக் குப்பைகள்...

கடலோரத் தூய்மை தினம் ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் சர்வதேசக் கடலோரத் தூய்மை தினத்தினை முன்னிட்டு எம்‌.எஸ்.சுவாமிநாதன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் குப்பையில்லா கடல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதியானது சர்வதேசக் கடலோரத் தூய்மை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தங்கச்சிமடத்தில் இயங்கி வரும் எம்‌.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சங்குமால் கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து கடல் வளம் மற்றும் மீன்களைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கடலோரத்தினை தூய்மைப்படுத்தும் பணியானது நடைபெற்றது. இதில் கடற்படை அதிகாரிகள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலானது அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பவளப் பாறைகள், கடல் பாசி, கடல் புற்கள் என அதிகப்படியான வளங்கள் நிறைந்திருக்கும் பகுதியாகும். கடலில் சேரும் குப்பைகள் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால் நாளுக்கு நாள் கடல்வாழ் உயிரினங்களும் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கடல் குப்பைகளை மேலாண்மை செய்யாவிட்டால் அடுத்த 10 வருடங்களில் மீன்களுக்குப் பதிலாகக் கடலில் குப்பைகள் தான் அதிகளவில் குவிந்து இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இக்காலகட்டத்தில் மீனவர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள், தன்னார்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்து கடல் குப்பைகளை மேலாண்மை செய்தால் மட்டுமே கடல் வளத்தினைப் பாதுகாக்க முடியும். இதையும் வாசிக்க: கதவுகளே இல்லாத கோவில்… வனத்தை காக்கும் காக்கும் பேச்சியம்மன் பற்றி தெரியுமா..? இப்பகுதிகளில் 2019ஆம் ஆண்டு சர்வதேசக் கடலோரத் தூய்மை தினத்தில் தொடங்கி இதுவரையிலும் 30 டன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேர்த்து, மறுசுழற்சி செய்யப்படுகிறது. கடல் என்பது அனைவருக்குமான ஒன்று இதனைப் பாதுகாப்பது, சுத்தமாகப் பராமரிப்பது அனைவரின் கடமையாகும். கடலினைச் சுத்தமாக வைக்க அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறி சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வேல்விழி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.