RAMANATHAPURAM

” சங்கில் வரையும் ஓவியம் - அழியா பொக்கிஷம் இது” - கொரோனாவிற்கு பின் புத்துயிர் பெரும் தொழில்....

சங்கில் வரையும் ஓவியம் ராமநாதசுவாமி கோவிலை சுற்றிலும் ஏராளமான சங்குகடைகள் உள்ளதில் கூடுதல் சிறப்பாக பெயிண்ட் மூலம் பெயர் எழுதிக்கொடுக்கும் சிறு தொழிலினை ஏராளமானோர் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு நலிவடைந்து சென்று வந்த தொழில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் வியாபாரம் போதுமான அளவிற்கு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரமானது சுற்றிலும் கடலால் சூழ்ந்த இடமாக உள்ளதால் இங்கு பிரதான தொழில் மீன்பிடி தொழில் தான். மேலும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட புண்ணிய ஸ்தலமாக ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கோவிலைச் சுற்றிலும் கடலில் கிடைக்கும் சங்குகள், சிப்பிகள் ஆகியவற்றின் மூலம் அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. சங்குகளில் கூடுதல் அழகிற்காக பெயிண்ட்கள் பயன்படுத்தி கோபுரம், சிவன், விநாயகர், முருகன், லெட்சுமி, பறவைகள், கடல் போன்ற இயற்கை காட்சி மற்றும் பெயர்களை எழுதி விற்பனை செய்கின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் தங்களது பெயர், பெற்றோர், மனைவி, குழந்தை மற்றும் நண்பர்கள் பெயர்களை எழுதி அவர்களுக்கு பரிசளிப்பதற்காக வாங்கி செல்கின்றனர். பல வருடங்கள் கடந்தாலும் அழியாமல் அப்படியே இருபத்தால் இது சுற்றுலா பயணிகள் நல்ல வரவேற்பில் உள்ளது. இதையும் வாசிக்க: இது தான் 2K ட்ரெண்ட் கொலு… அழகழகாய் அணிவகுத்த அவெஞ்சர்ஸ் பொம்மைகள்… இந்த தொழிலிலினை சிறு வயதில் இருந்து 40 வருடங்களாக 50-க்கும் மேற்பட்டவர்கள் செய்து வருகின்றனர். தற்போது, ஐந்துக்கும் குறைவான நபர்கள் மட்டுமே வரையும் பணியினை செய்கின்றனர். மற்றவர்கள் இதனை வாங்கி விற்பனை செய்கின்றனர். பால்சங்கு, வலம்புரி சங்கு, ஐவிரல் சங்குகள், கவடா, விரஞ்சான், வெட்டுச்சங்கு போன்ற சங்குகளில் பெயர் எழுதி கொடுக்கப்படுகிறது. சங்குகளில் விலை போக ரூ.30 முதல் ரூ.100 வரையிலும் பெயர் எழுதிக் கொடுக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெயிண்ட் மூலம் வரைந்த பின் ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டில் முக்கி எடுத்தால் எழுத்துக்கள் நன்றாக பதிவாகி விடும், ஆனால் ஆசிட்டில் முக்கி எடுப்பது என்பது சுலபமானது இல்லை அதிகமாக கையில் பட்டால் கை வெந்துவிடும் கொரோனா காலத்திற்கு பின்பு நலிவடைந்த தொழில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு வருமானம் நன்றாக உள்ளது. மேலும், தற்போது, நவராத்திரி திருவிழா நடைபெற்று வருவதால் வடமாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து சங்கில் பெயர் எழுதிச் செல்வதாக சங்கு வியாபாரம் செய்யும் கணேசன் கூறினார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.